டைம் பத்திரிகை 100 – பட்டியலில் இடம்பெற்ற மோடி தவிர்த்த இந்திய பிரபலங்கள்!

புதுடெல்லி: டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி தவிர, வேறு இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நர‍ேந்திர மோடி, தலைவர்கள் என்ற பட்டியலின் கீழ் இடம்பெற்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து, இதுவரை மொத்தம் 4 முறை அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார் மோடி.

அவரைப்போன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ன்பிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மோடி தவிர, மத்திய அரசின் சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் போராடிய 82 வயது மூதாட்டி பில்கிஸ், பேராசிரியர் ரவீந்திர குப்தா, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோரும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

You may have missed