துபாய்: அமீரக நாட்டில் ஐபிஎல் 13வது சீசன் துவங்கவுள்ள நிலையில், இதுவரையான ஐபிஎல் தொடர்களில், அதிவேக அரைசதம் அடித்தவர்கள் யார் என்ற ஒரு நினைவோட்டத்தை மேற்கொள்வோம்.

கே.எல்.ராகுல்

கடந்த 2018ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் கே.எல்.ராகுல், டெல்லி அணிக்கு எதிராக 14 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். இதில் 4 சிக்சர்கள் & 6 பவுண்டரிகள் அடங்கும்.

யூசுப் பதான்

யூசுஃப் பதான் 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக கடந்த 15 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். இந்த போட்டியில் வெறும் 22 பந்துகளில் 72 அடித்திருந்தார் யூசப் பதான்.

சுனில் நரைன்

கடந்த 2017ம் ஆண்டு, கொல்கத்தா அணியின் சுனில் நரைன், ‍பெங்களூரு அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 6 சிக்ஸர் & 5 பவுண்டரிகள் அடக்கம்.

சுரேஷ் ரெய்னா

கடந்த 2014ம் ஆண்டு சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 16 பந்துகளில் அரைசதம் வெளுத்தார் ரெய்னா. இப்போட்டியில், 25 பந்துகளில் 87 ரன்களைக் குவித்தார் ரெய்னா.

கிறிஸ் கெய்ல்

கடந்த 2013ம் ஆண்டு, பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல், புனே அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.