இந்திய – ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி – அதிக விக்கெட் வீழ்த்தியோர் யார்?

சிட்னி: ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ.

இவர், மொத்தம் 16 போட்டிகளில் ஆடி 33 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான். இவர் மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்று 22 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் இருப்பவர், இந்தியாவின் மிகச்சிறந்த முன்னாள் ஆல்ரவுண்டர் கபில்தேவ். இவர் மொத்தம் 20 போட்டிகளில் பங்கேற்று 21 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

நான்காமிடத்தில், இந்தியாவின் இஷாந்த் ஷர்மா உள்ளார். இவர் 10 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

ஐந்தாமிடத்தில் இருப்பவரும் இந்திய வீரர்தான். அவர் உமேஷ் யாதவ். மொத்தம் 10 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.