பாக்ஸிங் டே டெஸ்ட் – இந்திய & ஆஸ்திரேலிய வீரர்கள் யார் யார்?

மெல்போர்ன்: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் துவங்கியுள்ள நிலையில், இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. கடந்தப் போட்டியில் ஏமாற்றிய சிலர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.

கேஎல் ராகுல் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்தமுறை சொதப்பிய மயங்க் அகர்வால் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஷப்மன் கில், புஜாரா, ரஹானே, அனுமன் விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரைக் கொண்டதாக உள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணியில், ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரான் கிரீன், டிம் பெய்னே(கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்.