மும்பை: மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் கே எல் ராகுல் ஆகியோரை கபடி அணிக்காக தேர்வு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி.

ஆனால், இப்பட்டியலில் தனது பெயரை சேர்க்காமல் விட்டுள்ளார் கோலி.

மராட்டிய மாநிலம் ஓர்லியில் நடைபெற்ற Pro Kabaddi 2019 தொடரின் துவக்கப் போட்டியில் கலந்துகொண்டார் கோலி. அப்போது கபடி அணிக்காக தனது விருப்ப வீரர்களை தேர்வு செய்தார். கபடியில் அவர்கள் கலந்துகொண்டால், கிரிக்கெட்டில் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்றுள்ளார் கோலி.

மேலும் அவர் கூறியதாவது, “கபடி என்பது அதிக வலிமை மற்றும் தடகளத் திறன் தேவைப்படும் விளையாட்டு. எனவேதான் தோனி, உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா உள்ளிட்டோரை தேர்வு செய்தேன். அவர்கள் அனைவரும் நல்ல வலிமையும் தடகளத் திறனும் உள்ளவர்கள்.

இந்தியக் கபடி வீரர்களின் திறமையால் அந்த விளையாட்டு உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்திய வீரர்களின் உடல்திறன் மற்றும் மனத்திறன் ஆகிய காரணங்களால் அப்போட்டி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது” என்றுள்ளார்.