துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் மொத்தம் 5 சதங்கள் அடிக்கப்பட்டன. இதில் டெல்லி அணியின் ஷிகர் தவானின் கணக்கு 2.

இதற்கடுத்து, பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் ஒரு சதம் அடித்தார். ஆனால் இதுதான் பெரிய சதம்(132). மேலும், அதே அணியின் மயங்க் அகர்வால் ஒரு சதமடித்தார். இதற்கடுத்து, ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் 1 சதமடித்தார்.

அரைசதத்தைப் பொறுத்தவரை, மொத்தம் 34 அடிக்கப்பட்டுள்ளன. இதில், பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ், அதே அணியின் தேவ்தத் படிக்கல் மற்றும் பஞ்சாப் அணியின் ராகுல் ஆகியோர் தலா 5 அரைசதங்கள் அடித்தனர்.

இவர்கள் தவிர, ஐதராபாத் அணியின் வார்னர், சென்னை அணியின் டூ பிளசிஸ், மும்பை அணியின் இஷான் கிஷான், மும்பை அணியின் டி காக், டெல்லி அணியின் தவான் மற்றும் மும்பையின் சூர்யகுமார் ஆகியோர் தலா 4 அரைசதங்கள் அடித்துள்ளனர்.