ஜெனிவா

லக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமை படுத்திக் கொண்டுள்ளார்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46.8 கோடியைத் தாண்டி உள்ளது.  இதில் 12 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.    கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கவனம் செலுத்தி வருகிறார். உலக மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியம் குறித்து தனது டிவிட்டர் மற்றும் அறிக்கைகள் மூலம் அதிக அளவில் வலியுறுத்தி வருகிறார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  அதையொட்டி நேற்று இரவு முதல் அவர் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.   அவருக்கு எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை.   தாம் நலமுடன் இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.