ன்னியர்களுக்கான அரசியல் உரிமையை, இந்திய தேசிய விடுதலைக்கு பின்னான காலம் தொட்டே அதன் தலைவர்கள் நிர்ணயம் செய்தார்கள். திரு ராமசாமி படையாச்சியார் மற்றும் திரு M.A. மாணிக்கவேலு நாயக்கர் அவர்கள், தாம் சார்ந்த சமூகத்திற்கான உரிய பிரதிநிதித்துவத்தை அரசியல் அதிகாரத்தில், போராடி பெற்றனர். அதன் மூலம் அம்மக்களின் நியாயமான உரிமைகளை மீட்டெடுத்தனர். அதை தொடர்ந்த காலகட்டங்களில், பல வன்னிய தலைவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் வளர்ந்தார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வன்னிய மக்களை பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் பல தலைவர்களை உருவாக்கினர்கள் . காங்கிரஸில் வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, ம.கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் உருவாகி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆனார்கள்.

திராவிட முன்னேற்ற கழகத்தில், வீரபாண்டி ஆறுமுகம், செஞ்சி. ராமசந்திரன், துரைமுருகன், ஜெகத்ரட்சகன், MRK பன்னீர்செல்வம், Dr .செந்தில் போன்றோரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பண்ருட்டி ராமசந்திரன், சி.வீ சண்முகம், T .M . செல்வகணபதி போன்ற தமிழகம் அறியும் தலைவர்களையும் தந்தார்கள்.

இத்தலைவர்களால், வன்னிய சமூகத்துக்கான உரிய அரசியல் அங்கீகாரமும் அதிகார பகிர்வும் அம்மக்களுக்கு கிடைத்தது என்பது மிகையாகாது. ஆனால், வன்னியர் பெயர் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சி, நாட்டுக்கு அளித்த தலைவர்கள் யார்? மாறாக, ஏ.கே. நடராஜன், பேராசிரியர் தீரன்,வாழப்பாடி ராமமூர்த்தி, சி.வீ.சண்முகம், காடுவெட்டி குரு குடும்பத்தார், வேல்முருகன் போன்ற வன்னிய அரசியல் தலைவர்களை பொதுவெளியில் கீழ்த்தரமாக தாக்கியும், வன்முறையால் மிரட்டியும் அரசியல் செய்பவர்கள் யார் என்பதை தமிழகம் அறியும்!

மேற்கூறிய வன்னிய அரசியல் தலைமைகளுக்கு வன்னியர் பெயர் கொண்டு அரசியல் செய்யும் கட்சி, செய்த கொடுமைகளை மற்றவர் எவரும் செய்யவில்லை. வன்னிய சமூகத்தில் இருந்து வேறு மாற்று தலைமை உருவாகுவதை திட்டமிட்டே வன்முறையால் தடை செய்தார்கள். போராட்டம் நிகழ்த்தியும் சாதிக்கமுடியாத பல சாதனைகளை அரசியல் அதிகாரம் கொண்டு வாழப்பாடி ராமமூர்த்தி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன் போன்ற தலைவர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கு, விளம்பரமில்லாமல் செய்தார்கள் என்பதை வன்னிய சமுதாய தலைவர்கள் அறிவார்கள்.

அவர்கள் ஆற்றிய மக்கள் மற்றும் சமூக பணியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தவில்லை மாறாக தமது கடமையாக செய்தார்கள். மேலும், வன்னிய சமூகத்தை கொண்டு அரசியல் கட்சி தொடங்கியபின் வேறு தலைமைகள் உருவாகுவதை திட்டமிட்டு மொட்டுலே கிள்ளி எறிந்தனர், என்பதை வன்னிய சமூக மக்களே அறிவார்கள். இவர்களின் தனிப்பட்ட அரசியல் அதிகார அபிலாஷைகளால், வன்னிய மக்களின் அரசியல் அதிகார முன்னேற்றம் தடைப்பட்டதை அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிவார்கள். மேலும், வீரமிகு வன்னியகுல மக்களின் பிம்பத்தையே வன்முறையாளர்களை போன்று சித்தரிக்கப்படுவதற்கு காரணமானவர்களும், இவர்களே.

நாடு நமக்கென்ன செய்தது என்று கேட்காதீர், நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்பீர், என்றார் ஜான் F. கென்னடி. சமூகம் நமக்கென்ன செய்தது என்று கேட்க்காதீர், நம் சமூகத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று கேளுங்கள் என்று, லட்சோப லட்ச வன்னிய சொந்தங்கள் கேட்கிறார்கள். Dr. ராமதாஸ் வன்னிய சமூகத்திற்கு ஆற்றிய பணியைவிட வன்னிய சமூகத்தால் அவர் குடும்பம் அடைந்த பயன் மிக பெரியது என்பதை அவர் குடும்பத்தாரின் நீண்டு வரும் சொத்து பட்டியல் கட்டியம் இட்டு சாட்சி சொல்லும்.

காலமும், நாட்டு மக்களும் அறிவார்கள் வன்னிய மக்களுக்கு அநீதி இழைத்தது யார் என்பதை. தமிழக தேர்தல், வன்னிய குல பெயர்சொல்லி பிழைப்பு நடத்தும் குடும்பத்தாரின் அரசியல் வாழ்விற்கு முடிவுரை எழுதும்.

கட்டுரையாளர்:  ராஜ்குமார் மாதவன்.