மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்துஅல்ல  : விவேகானந்தர்

நெட்டிசன்:

மெரிக்காவில், ‘உலக மதங்களின் நாடாளு மன்றம்’ என்ற அமைப்பு செயல்பட்டது (1893). அந்த அமைப்பில், விவேகானந்தர் ஆற்றிய உரையைத்தான் சங்பரிவாரங்கள் சிலாகித்துப் பெருமை பேசுகின்றன. இந்த நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜான் ஹென்றி பாரோஸ்எனும் பாதிரியார். அவர் எழுதிய ‘ஆசியாவில் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பு’ என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மதங்களுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு முடிந்த பிறகு, நான் விவேகானந்தருடன் உணவு விடுதிக்கு சாப்பிடச் சென்றேன்; அந்த உணவு விடுதி, நிகழ்ச்சி நடந்த ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் தரைதளத்தில் இருந்தது. ‘என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட் டேன். ‘எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள்’ என்று விவேகானந்தர் கேட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தி யதால்தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார்.

19ஆம் நூற்றாண்டு இறுதியில் வடமாநிலங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பஞ்சத்தில் மனிதர்கள், கால்நடைகள் ஏராளமாகப் பலியானபோது பார்ப்பனர்கள் பசு மாட்டைக் காப்பாற்ற ‘கோ ரக்ஷன் சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கி, விவேகானந்தரிடம் உதவி கேட்க வந்தனர். மனிதர்களைக் காப்பாற்றாமல் மாடு களைக் காப்பாற்ற வந்துவிட்டீர்களா? என்று கடுமை யாகப் பேசி அவர்களை விரட்டினார், விவேகானந்தர்.

விவேகானந்தரே மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர்க்கவில்லை.

“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4).

“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக்கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக்கறி உணவை சமைத் தார்கள்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9).

“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்துஅல்ல.” (He is not a good Hindu whodoes not eat beef) – (தொகுதி-3 – அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).

-(வாட்ஸ்அப்)