’மாஸ்டர்’ பட நடிகைக்கு பிடித்த ஹீரோ.. நழுவல் பதில் அளித்து எஸ்கேப்..

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட கதாநாயகி மாளவிகா மோகனன். அவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்றபோது கனடா நாட்டு நடிகர் ரெயன் கோஸ்லிங் பெயரைச் சொன்னார். அவர் மீது எனக்கு ஈர்ப்பே இருந்தது என்றார். இந்திய நடிகர்கள் யாரையாவது பிடிக்குமா என்றதற்கு ஷாருக்கானை பிடிக்கும். அவரது சுறுசுறுப்பு மிகவும் பிடிக்கும் இந்நாளில் அவர் என்ன செய்கிறார் என்பதை காண வேண்டும் என்று எண்ணுகிறேன். என அதில் அளித்தார்.


நம்மூர் ஹீரோக்கள் யார் பெயரையாவது சொன் னால் மற்றவர்களுக்கு கோபம் வந்துவிடும். இப்படித்தான் நடிகை நிலா சமீபத்தில் ஜூனியர் என் டி ஆரைவிட மகேஷ்பாபுவை பிடிக்கும் என்று சொன்னதற்கு ஜுனியர் என் டி ஆர் ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார். அந்த வகையில் பிரச்னையில் சிக்காமல் மாளவிகா மோகனன் எஸ்ஸானார்.