அடுத்த கமல் யார்?: கஸ்தூரி கணிப்பு  

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் டீசரை பார்த்த கஸ்தூரி, அடுத்த கமல், தனுஷ்தான் என்று கணித்திருக்கிறார்.

கமல் – கஸ்தூரி

விசாரணை’ படத்திற்கு அடுத்து,   வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவர இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் முதல் பாகத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, ‘வடசென்னை டீஸர் பாத்தேன்.  அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்!’ என்று தெரிவித்திருக்கிறார்.

தனுஷ்

சென்னையில் உலவும் தாதாக்கள் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள்   நடித்திருக்கிறார்கள்.