ஐபிஎல் தொடர் – சிறந்த பந்துவீச்சு யாருடையது?

அபுதாபி: நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரையிலான போட்டிகளில், சிறந்த பவுலிங் செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரராக இருக்கிறார் மும்பை அணியின் பும்ரா.

அவர் 4 ஓவர்கள் வீசி, 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இதுவரையான சிறந்த பந்துவீச்சாக இருக்கிறது.

அவருக்கு அடுத்த இடத்தில் டெல்லி அணியின் ரபாடா வருகிறார். அவர் 4 ஓவர்களில் 24 ரன்கள் வழங்கி 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் வருவது ஐதராபாத்தின் ரஷித் கான். அவர் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். நான்காவது இடத்தில் வருவதும் அவரே. 4 ஓவர்களில் 14 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதுதான் அந்த பெர்பார்மன்ஸ்.

ஐந்தாவது இடத்தில் வருபவர் பஞ்சாப் அணியின் முகமது ஷமி. 4 ஓவர்கள் வீசி 15 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர்.