ஆர்.கே. நகர் தொகுதியில் தமிழிசை போட்டியா?: தமிழிசை பதில்

சென்னை:

ர்.கே.நகர் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுவதாக கிளம்பியிருக்கும் யூகத்துக்கு அவர் பதில் அளித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து அவரின் தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 12-ம் தேதி அத்தொகுதியில்  இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பாஜக சார்பில், அக் கட்சியின் தமிழக  தலைவர் தமிழசை சவுந்தர் ராஜன் போட்டியிட இருப்பதாக யூகங்கள் கிளம்பின.

இந்த நிலையில் இன்று சென்னையில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “ஆர்.கே.நகர் தொகுதியில் நிச்சயமாக பாஜக போட்டியிடும். ஆனால் வேட்பாளர் யார் என்பது  குறித்து கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நான் போட்டியிடுவேன் என்று சொல்லப்படுவது யூகம்தான்” என்றார்

மேலும், “தற்பொழுது தமிழக அரசியலில் தெளிவற்ற சூழல் நிலவுகிறது. ஆளும் கட்சியான  அதிமுக பல பிரிவுகளாக பிளவுப்பட்டு கிடக்கிறது. தமிழகத்தில் திடமான ஆட்சி இல்லை” என்று  தமிழிசை தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.