ராஜஸ்தான் மாநில முதல்வர் யார்? ராகுலின் முடிவுக்கு விட்ட காங்.எம்எல்ஏக்கள்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இன்று ஜெய்பூர் காங்கிரஸ் அலுவலகத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில முதல்வராக யாரை நியமிப்பது என்பதை  அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியின் முடிவுக்கு செய்ய பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 101 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், 99 இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி,  பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.

இதையடுத்து, இன்று, வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது.

இங்கு முதல்வர் பதவிக்கு மாநில இளந்தலைவரான சஞ்சின் பைலட்டும், முன்னாள் முதல்வரான அலோக் கெலாட்டும் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மூன்றில்  இரண்டு பகுதியினர் சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரி வித்து வருகின்றனர். இதன் காரணமாக யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் முடிவுக்கு விடுவதாக பெரும்பாலானா எம்எல்ஏக்கள் தெரிவித்து உள்ளனர்.