ஆஸ்திரேலியாவின் ஆஷ்டன் அகாரை கவர்ந்த அந்த ராக் ஸ்டார் யார்..?

கேப்டவுன்: தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாதான் என்று கூறியுள்ளார்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், 5 விக்கெட்டுகளை சாய்த்த ஆஷ்டன், ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யாரென்றால், அது இந்திய ஆல்ரவுண்டர் ராக் ஸ்டார் ரவீந்திர ஜடேஜாதான். கடந்தமுறை இந்தியா வந்தபோது அவரிடம் நிறைய பேசுவதற்கு நேரம் கிடைத்தது.

அப்போது சுழற்பந்து வீச்சு நுட்பங்கள் குறித்த அதிக டிப்ஸ்களை அவர் எனக்கு வழங்கினார். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அவர், பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என்று அனைத்து விஷயத்திலும் தன்னால் முடிந்த முத்திரையைக் கட்டாயம் பதித்து விடுகிறார்.

அவர் ஒரு ஆச்சர்யகரமான வீரர். அவர் உண்மையில் ஒரு ராக் ஸ்டார். நான் அவரைத்தான் பின்பற்ற விரும்புகிறேன்” என்றுள்ளார் ஆஷ்டன் அகார்.