நிதித்துறை அமைச்சர் யார் ? – மீண்டும் சர்ச்சையில் சு.சுவாமி

இந்தியாவின் நிதி அமைச்சர் யார் என்ற சர்ச்சைக்குரிய கேள்வியை சுபரமணியன் சுவாமி எழுப்பியுள்ள்ளார். பாஜாகவை சேர்ந்த ராஜ்ய சபையின் உறுப்பினரான சுப்ரமணிய சுவாமி அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அதற்கான எதிர்வினைகளை பெற்றார். இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் நிதித்துறை அமைச்சர் யார் என்ற கேள்வியை எழுப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
ss
சுப்ரமணிய சுவாமி தனது விட்டரில் “ தி இந்து நாளிதழியில் பியூஷ் கோயல் இடைக்கால நிதி அமைச்சர் என்று குறிப்பிட்டு கட்டுரை வந்துள்ளது. அப்படி ஒன்றும் இல்லை. அடுத்த கட்டுரையில் ஜெட்லி பதிலளித்துள்ளதாகவும், அந்த பதில் நிதித்துறை அமைச்சருடையது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எப்படி நிதி அமைச்சர் மற்றும் இடைக்கால நிதி அமைச்சர் சேர்ந்து செயல்பட முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்

சில நாட்களுக்கு முன்பு அருண் ஜெட்லி அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் பொறுப்பில் இல்லாத நிலையில் ரயிவேத்துறை அமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த பிரச்சனையை கடந்த 18ம் தேதி முதல் முறையாக டிவிட்டரில் சுப்ரமணிய சுவாமி ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் இதனை பெரிதாக முயன்று வருகின்றனர்.

”பிரதமரின் இணையதள பகுதியில் அருண் ஜெட்லி பொறுப்பில் இல்லாத நிலையில் பியூஷ் கோயல் இடைக்கால நிதியமைச்சராக செயல்படுவார் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் நிதித்துறை அமைச்சரின் இணையதள பகுதியில் ஜெட்லி நிதித்துறை அமைச்சராக உள்ளதாக குறிப்பிட்டு காட்டுகிறது” என்று மேலும் சர்ச்சைக்குரிய கேள்வியை சுப்ரமணிய சுவாமி எழுப்பியுள்ளார்.