ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபர் யார் தெரியுமா?

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிக வரி செலுத்தும் நபர்,’ நம்ம தல’ தோனிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது நேர்மைக்கு விசில் போடலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.  டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். மேலும், ஒரு நாள் போட்டி,  மற்றும்டி20 தொடர்களுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்று  3 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த  2017-18 நிதியாண்டில் ரூ.12.17 கோடியை வருமான வரியாக ஜார்கண்ட் மாநிலத்தில் செலுத்தி யுள்ளார். இதன் காரணமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்துள்ளது.

தோனிக்கு விளையாட்டு போட்டிகளின் மூலம் வருவாய் மட்டுமல்லாது,  விளம்பரங்கள் மற்றும் கால்பந்து, ஹாக்கி தொடர்களுக்கான அணிகளை வைத்திருப்பது ஆகியவற்றின் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

இதன்மூலம், கடந்த நிதியாண்டில் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் வருமானவரி செலுத்தியுள்ளார். தோனி ஏற்கனவே  கடந்த 2013-14-ம் நிதியாண்டிலும் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை  பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த பெருமையை பெற்றுள்ளார்.

நேர்மையாக வரி செலுத்தி வரும் ‘தல’ தோனிக்கு விசில் போடுவோம்…