புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் யார்? ஆர்எஸ்எஸ் மத்தியஅரசுக்கு மறைமுக மிரட்டல்

டில்லி:

ந்திய தலைமை பொருளதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில்,  புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக யாரை  நியமனம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ்  அமைப்பு மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது.

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த  அரவிந்த் சுப்பிரமணியன், மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி மீது ஏற்பட்ட பிணக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இவர் ஏற்கனவே  அமெரிக் பீட்டர்சன் பன்னாட்டு பொருளியல் கழகத்தில் மூத்த ஆய்வாளராக பணியாற்றி உள்ளார். அதுபோல மாறிவரும் உலக பொருளாதாரச் செல்வாக்கு குறித்த வல்லுநராகக் கருதப்படுகிறார். தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அரவிந்த் மீண்டும் அமெரிக்காவிலேயே குடியேற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக  யாரை நியமனம் செய்யலாம் என மத்திய அரசு தலையை பிய்த்துகொண்டுள்ளது. இந்த வேளையில், பாஜகவின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு,  இந்திய கலாச்சாரத்தை மதிப்பவரையே  மத்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன் என்பவர், புதிய பொருளாதார ஆலோசகராக யாரை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.

அதில், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ள முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்  அரவிந்த் சுப்பிரமணியத்துக்கு நமது நாட்டை பற்றி சரியான புரிதல் இல்லை என்றும், அவர்  விவசாயிகளை அவர் புறக்கணித்தார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்

எனவே புதிய  தேர்ந்தெடுக்கப்பட உள்ள   தலைமை பொருளாதார ஆலோசகர் இந்திய கலாச்சாரத்தை மதிப்பவராக இருக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்களின் நலன்களில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரையே தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மறைமுகமாக மத்திய பாஜக அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.