அடுத்த பிரதமர் யார்?…..துரைமுருகன் புது குண்டு
திருநெல்வேலி:
திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர் என்று துரைமுருகன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் திமுக பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,‘‘தமிழகத்தில் திமுக ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர்’’ என்றார்.