யாருக்கு சொந்தம்? லாக்கப்பில் அடைக்கப்பட்ட கிளி!

ரு குடும்பத்தினருக்கிடையே, கிளி யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால் அந்த கிளி லாக்அப்பில் அடைக்கப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உ.பி. மாநிலம் ஹரித்வாரில் வசிக்கும் ராஜ்வீர் என்பவரின் கிளி கடந்த ஒரு வருடத்துக்கு முன் காணாமல் போனது. பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை.  இந்நிலையில் தற்செயலாக அவரது நண்பரான முஸ்கான் வீட்டுக்கு அவர்  சென்ற போது தனது செல்லக்கிளி அங்கிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தனது முன்னாள் உரிமையாளரை அடையாளம் கண்ட கிளி அவரது  பெயரை சொல்லி அழைத்தது.  இதனால் நெகிழ்ந்துபோன ராஜ்வீர் தனது கிளியை திரும்ப அளிக்கும் படி நண்பர் முஸ்கானிடம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் தஞ்சமடைந்துள்ள கிளி தனக்குத்தான் சொந்தம் என முஸ்கான் மறுத்துவிட்டார்.

நீண்ட வாக்குவாதத்துக்குகுப் பிறகும் பிரச்சினை  தீரவில்லை. ஆகவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவலர்கள் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்த  நீண்ட நேரம்  பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை கிளி காவல்நிலைய லாக்கப்பிலேயே  இருக்கட்டும் எனக் கூறி  காவலர்கள் இரு தரப்பினரையும் அனுப்பிவைத்தனர். இதையடுத்து கிளி லாக்அப்பில் அடைக்கப்பட்டது.