ரஜினியை கடத்த திட்டமிட்ட வீரப்பன்?: வர்மா கிளப்பும் பூதம்

download

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்,, சந்தன மரக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட சம்பவத்தை அத்தனை லேசில் யாரும் மறந்திருக்க முடியாது.

அந்த பழைய சம்பவத்தை வைத்து புதிதாக ஒரு குண்டை வீசியிருக்கிறார்  பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் “வீரப்பன் முதலில் கடத்த திட்டமிட்டதே ரஜினியைதான்” என்று கூறி, சூட்டைக் கிளப்பியிருக்கிறார் இவர்.

வழக்கமாக ஏதாவது திரியைக் கொளுத்திப்போடுபவர்தான் இவர். ஆனால், இந்த விசயத்தை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள்.

காரணம், இவரே ஒருமுறை வீரப்பனை நேரில் சந்தித்து பேசியிருக்கிறாராம். அதோடு, தற்போது வீரப்பன் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்.

அதற்காக வீரப்பன் சம்பந்தப்பட்ட பலரிடம் பேசியிருக்கிறார்.

ஆகவே அப்போது இவருக்கு கிடைத்த தகவலாக கூட இருக்கலாம் என்கிறார்கள். .

ஏற்கனவே ரஜினியை பல முறை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டவர்தான் வர்மா.

ஆனாலும் ரஜினியை இவர் விடுவதாக இல்லை போல..!

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: cinebits, kidnap, rajini, ramgopal varma, veerapan, கடத்தல், சினி பிட்ஸ், திட்டம், ரஜினி, ராம்கோபால் வர்மா, வீரப்பன்
-=-