முதல் டெங்கு தடுப்பு ஊசிக்கு ‘who’ அங்கீகாரம்!

--

லகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் பயனாக இந்த ஊசி விரைவில் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் டெங்கு தடுப்பூசி 2016ம் ஆண்டு ஏப்ரல் 4ந்தேதி சுகாதாரத்துறை (DOH) வெளியிட்டது. ஆனால், அதற்கு அப்போது அங்கீரம் தரப்படவில்லை.  தற்போது இந்த தடுப்பு ஊசிக்கு உலக சுகாதார அமைப்பு (who) அங்கீகாரம் வழங்கி உள்ளது.

டெங்கு காய்ச்சலை பரப்பும்  ஏடிஎஸ் கொசுவால்  ஆண்டுக்கு 390 மில்லியன் பேர் பாதிக்கப்படு கிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சனோஃபி என்ற நிறுவனம், டெங்கு நோய்க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டது.

கடந்த 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாகவும்,  இந்த ஆய்வுக்காக  4000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபட்டதாகவும் அதன் பலனாகவே இந்த தடுப்பூசி உருவான தாக கூறப்பட்டுள்ளது.

‘Dengvaxia’ தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளதால், உலகம் முழுவதும் உடனே இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.

‘Dengvaxia’ என்னும் இந்தத் தடுப்பூசி, ஒன்பது வயதைக் கடந்தவர்களுக்கு வருடத்துக்கு மூன்று முறை போடலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.