ஜெனீவா: முகக்கவசம் அணிவது தொடர்பான வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், 200 நாடுகளை பாதித்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் ஒரு பக்கம் தீவிரம் அடைந்துள்ளன.

மருந்துகள் இல்லாததால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அனைத்து நாடுகளும் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது.

இந் நிலையில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் பெரியவர்களை போலவே முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வழிகாட்டல்களை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாவது: 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டாம். ஆனால் 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் சூழ்நிலையை பொறுத்து முகக்கவசம் அணியலாம்.

அவர்கள் உள்ள பகுதியில் கொரோனா இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.