கொரோனா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனைகளை மீண்டும் தொடங்க WHO பரிந்துரை

ஐ.நா. சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் விரைவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கு விரைவில் பரிந்துரை செய்ய இருக்கிறார்கள். WHO இதுவரை நிறுத்தி வைத்திருந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் பரிசோதனைகளை மீண்டும் துவங்க பரிந்துரைத்துள்ளது.

சோதனைக்குரிய COVID-19 மருந்துகளின் மருத்துவ பரிசோதனையின்படி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இடைநிறுத்திய பின்னர், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல், வல்லுநர்கள் இம்மருந்தின் பயன்பாட்டிற்கான பாதுகாப்புத் தரவை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், அது திருப்திகரமாக இருப்பதால், இப்போது திட்டமிட்டபடி சோதனைகளைத் தொடர பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறினார். ஐ.நா. சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் விரைவில் இந்த மருந்து வழங்குவதை பரிந்துரைக்க முடியும். உலகளாவிய சோதனைக்கான WHO இன் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு, இப்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றி கிடைக்கக்கூடிய அனைத்து இறப்பு தரவுகளையும் ஆய்வு செய்துள்ளதாக இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

சில ஆய்வு முடிவுகளின்படி, COVID-19 க்கு இம்மருந்து உட்கொள்ளும் நபர்கள் உட்கொள்ளாதவர்களை விட இறப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

டெட்ரோஸ் மேலும் கூறும்போது, சோதனை நெறிமுறையை மாற்ற எந்த காரணங்களும் இல்லை என்று குழுவின் உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். கொரோனா வைரஸுக்கு ஆட்படவில்லை என்றாலும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்; COVID-19-க்கு எதிராக மருந்து பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் எதுவும் இல்லை. WHO இன் மருந்துகளுக்கான நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்பட சோதனையில் உள்ள அனைத்து மருந்துகளையும் தொடர ஒப்புதல் அளித்ததாக டெட்ரோஸ் கூறினார். பரிசோதிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மற்றும் எச்.ஐ.வி காம்பினேஷன் தெரபி மருந்து உள்ளிட்ட பிற சிகிச்சைகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். 35 நாடுகளில் 3,500 க்கும் மேற்பட்டோர் இந்த பரிசோதனைகளில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று டெட்ரோஸ் கூறினார்.

தமிழில்: லயா

 

கார்ட்டூன் கேலரி