அலிகார்:

மகாத்மா காந்தியின் உருவப் பொம்மையை துப்பாக்கியல் சுட்ட பூஜா சகுன் பாண்டே தலைமறைவானார். உடனிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில், காந்தியின் உருவ பொம்மையை   அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார்.

உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் ரத்தம் போல் வழிந்து ஓடியவுடன், அந்த உருவ பொம்மை மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினார்கள்.

இதை வீடியோவாகவும் வெளியிட்டனர். சுடும்போது நாதுராம் கோட்சே வாழ்க என்று இந்தியில் முழக்கமிட்டனர். அத்துடன் கோட்சே உருவப் படத்துக்கு மரியாதையும் செலுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக கடும் பரவியது. இதனையடுத்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து, போலீசார் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பெண் தலைவர் பூஜா சகுன் பாண்டேவை தேடிவருகின்றனர்.