ரானில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்  தொற்றை தடுக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பினர் முகாமிட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற நாகரீக செயல்களை கூட செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவைத் தொடர்ந்து ஈரான் நாட்டில் கொரோனா தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 250 சதவிகிதம் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (who) கவலை தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய உள்பட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2943-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 80,151ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான் நாடு கொரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு சுமார்  1501 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 66 பேர் பலியாகி உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 250 சதவிகிதம் அளவுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஈரானின்   தலைவர் அயதொல்லா அலி கொமேனியின்  ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவரான முகமது மிர்முகமதி, கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளார். இதைத்தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு ஈரானில் முகாமிட்டு உள்ளது.

உலகசுகாதார அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஈரானில் முகாமிட்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்குடம் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுவினர் பரிமாற்ற இயக்கவியல் மற்றும் ஆபத்தில் உள்ள மக்களை அடையாளம் காண்பதுடன், பதில் மற்றும் தயார்நிலை முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் அளவிடுவதற்கும் வழிகாட்டுதல்களை வழங்கும் என்று தெரிவித்து உள்ளது..