புதுடெல்லி :
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி 30 அன்று முதன்முதலாக கேரளாவில் கண்டறியப்பட்டது.
இதுவரை 78 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி 1,17,956 உயிர்களை பலிவாங்கியிருக்கும் இந்த நோய் பரவாமல் தடு்க்க மத்திய அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற குற்றாச்சாட்டு நீண்ட நாட்களாக நிலவிவருகிறது.

இந்நலையில் கொரோனா வைரஸ் குறித்து இந்திய அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது யார் என்றும் எப்போது இது குறித்து தெரிய வந்தது என்றும் கேள்வி எழுப்பிய ஜம்முவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சௌதரி தகவலறியும் உரிமை சட்டத்தில் மத்திய அரசை கேள்வியெழிப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சகம் இவ்வாண்டு ஜனவரி 11ம் தேதியே இது குறித்து புதுடெல்லியில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர். பூனம் கேத்ரபால் சிங் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தனுக்கு கடிதம் அனுப்பியதாக பதிலளித்துள்ளது.
இந்த அமைப்பு அனுப்பிய கடிதத்தில் 2019 டிசம்பர் 12 முதல் 29 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்குவதற்கு முன்பே உலக சுகாதார அமைப்பு மத்திய அரசை எச்சரித்தபோதும், இதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல் இருந்து விட்டு, இப்போது, பண்டிகைக்காலங்களில் கூடா வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் நேரத்தில், தகலறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட இந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.