லெனினுடன் அறையில் பேசிக்கொண்டிருந்தவர் யார்?

நெட்டிசன்:

தோழர் லெனின் சோவியத் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயம்

அவரைக் காண நிறைய பத்திரிகையாளர்கள் வந்து அவரது அறை முன் காத்திருந்தார்கள். தோழர் கொடுத்த சந்திப்புக்கான நேரம் தாண்டி விட்டது.

பொதுவாய் தோழர் நேரத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவர். ஆனால், அவரே இப்போது அதை மீறிக் கொண்டிருக்கிறார் என்றால், தோழருடன் அறைக்குள் உரையாடிக் கொண்டிருக்கும் முக்கிய பிரமுகர் யாராய் இருக்கும் என்ற ஆவலும் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்தது.

வெகுநேரம் கழித்து அந்த நபருடன் தோழர் அறையை விட்டு வெளியே வந்தார். லெனினுடன் அவ்வளவு நேரம் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு எளிய கிராமத்து விவசாயி. பத்திரிகையாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது லெனின் கூறினார் “தாமதத்துக்கு மன்னித்து விடுங்கள். இந்த விவசாயி சில விவசாயத் திட்டங்களை என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அவை அருமையாக இருந்தன. அதனால் தான், நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டேன்” என்று.
அவர் உண்மையான மக்கள் தலைவர்.

டில்லியில் விவசாயிகள் அம்மணமாய் போராடிக் கொண்டிருந்தபோது இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமருடன் டெல்லியில் மெட்ரோ ரெயில் உட்பட ஆங்காங்கே நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.

என்னத்தைச் சொல்ல…

(வாட்ஸ்அப் பதிவு)

Leave a Reply

Your email address will not be published.

You may have missed