பாகிஸ்தான் விடுவித்தபோது அபிநந்தனுடன் இருந்த பெண் யார்? பரபரப்பு தகவல்கள்…

டில்லி:

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர், அபிநந்தன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். அவரை வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வின்போது, பாகிஸ்தான் ராணுவ வீரர மற்றும் ஒரு பெண் அபிநந்தனுடன் உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. புகைப்படத்தில் உள்ள பெண் யார் என்று கேள்வி எழுந்தது.

இதுகுறித்து ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்தவாறு கதைகளை கூறி வந்தனர். சிலரோ, அந்த பெண் அபியின் மனைவி என்றும் குறிப்பிட்டிருந்தனர்.அந்த பெண் ஒரு பாகிஸ்தான் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த அந்த பெண் அதிகாரியின் பெயர் டாக்டர் பஹீரா பக்டி. இவர் இந்திய விவகாரங்களை கையாளும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனர் என கூறப்பட்டுள்ளது.

இவர் மூலம்தான், உளவாளி என்று கூறி பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  குல்பூஷன் யாதவை சந்திக்க, அவரது அவரது தாய் மற்றும் மனைவி இஸ்லாமாபாத் சென்றிருந்தபோது, அவர்களுடன் இருந்து உதவி செய்தவரும் இவர்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.

அவரையே, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் அரசு, அனுப்பி வைத்து, அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி