மணிப்பூர் மாநிலத்தில்  ஆட்சி அமைக்கப்போவது யார்? இரோம் ஷர்மிளா  வெல்வாரா?

டெல்லி

த்தரபிரதேசம்,மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்து முடிந்த து. வாக்குச்சீட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தற்போது முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் 5 தொகுதிகளில், பாஜக 2 தொகுதிகளிலும்  முன்னிலையில்  உள்ளன.

மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 60சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கரஸ், பாஜக,திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த 3 முறை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸூக்கு இந்தமுறை வாய்ப்பு நழுவும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜக 25 முதல் 31 இடங்களையும், காங்கிரஸ் 17 முதல் 23 இடங்களையும், மற்றவர்கள் 9 முதல் 15 வரை பிடிப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதங்கள் சிறப்பு சட்டத்தை நீங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த இரோம் ஷர்மிளா தற்போதைய நிலவரப்படி பின்னடைவு அடைந்துள்ளார். அடுத்தடுத்த சுற்றுகளில் இவருக்கு வெற்றிவாய்ப்புகள் இருக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.