லண்டன்: வெற்றிக்கான இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 358 ரன்களை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இன்னும் 2 நாட்கள் ஆட்டம் முழுமையாக மீதமிருக்கும் நிலையில், வெற்றிக்கான வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கே அதிகமுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற, இரண்டாவது டெஸ்ட் டிரா ஆனது.

இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடியான ஜோசப் பர்ன்ஸ் 7 ரன்களுக்கும், ராய் 8 ரன்களுக்கும் அவுட்டாகிவிட, ஜோ ரூட் நங்கூரமிட்டு ஆடி வருகிறார். அவர் ஆட்டமிழக்காமல் 75 ரன்களை எடுத்துள்ளார். ஜோ டென்லி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டுக்கு 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்திற்கு பதிலாக களமிறங்கிய மேமஸ் லபுஷானே, தனது பங்களிப்பை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். முதல் இன்னிங்ஸில் அவர் 74 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 80 ரன்களும் அடித்தார்.