யாருக்கு வெற்றி? – கணிக்க இயலாத நிலையில் முதல் டெஸ்ட்!

லண்டன்: யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியாத வகையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி.

வெற்றிக்கு 277 ரன்கள் தேவை என்ற நிலையில், தற்போது நடந்துவரும் 4வது நாள் ஆட்டத்தில் 167 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை அடித்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 169 ரன்களை மட்டுமே எடுத்து, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 277 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.

பாகிஸ்தான் அணியின் யாசிர் ஷா அடித்த 33 ரன்கள்தான், இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும். தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 33 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி