சென்னை,

ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வேட்புனு தாக்கல் முடிவடைந்து 58 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், அதிமுக 3வது இடத்தையே பிடிக்கும் என்றும்  லயோலா கல்லூரி கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக மதுசூதனன், திமுக சார்பாக மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம், பாஜ சார்பாக கரு.நாகராஜன்,  சுயேச்சையாக டிடிவி தினகரன் உள்பட 58 பர் போட்டிபோடுகின்றனர்.

இந்நிலையில்,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள், மக்கள் தொடர்பகம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தினர்.

இந்த கருத்துக்கணிப்பில் 33 சதவிகிதம் வாக்குகள் திமுகவுக்கு கிடைப்பதாக தெரிவித்துள்ளது. டிடிவி தினகரனுக்கு 28 சதவிகித வாக்குகளும்,  அதிமுகவுக்கு 26சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாம் தமிழர் கட்சிக்கு  2.18% , பாஜக 1.23% வாக்குகளையும்  பெறும் என்றும் கருத்துக் கணிப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 3வது இடமே கிடைக்கும் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.