நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இவர்களுக்கு இடம் உண்டா?

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் துவங்கவுள்ள நிலையில், இந்திய அணியில் இஷாந்த் சர்மா, பிரித்வி ஷா, அஸ்வின் மற்றும் ரிஷப் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒருநாள் தொடரை மிக மோசமான முறையில் இழந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியே ஆக வ‍ேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தொடரில் மொத்தம் 2 போட்டிகள் மட்டுமே உள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோலி, “இஷாந்த் சர்மா, காயத்திலிருந்து மீண்ட பிறகு, முந்தைய நாட்களைப் போலவே இப்‍போதும் செயல்படுகிறார். அவருக்கு நியூசிலாந்தில் விளையாடிய அனுபவம் ஏற்கனவே உள்ளது.

பிரித்வி ஷா, தனக்கென தனி பாணியை கடைபிடிக்கும் வீரர். அவர் அதைத் தொடர வேண்டும். ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அணிக்குத் தேவை என்பதால், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் இடம்பெறுவர்.

கடந்தமுறை நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் பவுலிங் டீமை விட, இந்தமுறை வந்துள்ள இந்திய அணியின் பவுலிங் டீம் சிறப்பாக உள்ளது. எங்களின் டெஸ்ட் வெற்றிப் பயணம் தொடரும் என்பதே என் நம்பிக்கை” என்றார்.

இதன்மூலம், இஷாந்த் மற்றும் பிரித்வி உள்ளிட்டோரின் இடம் முன்னரே பதிவுசெய்யப்பட்டு விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.