Random image

குடிப்பழக்கம் உள்ளவரின் குடும்பமே விஷம் அருந்திய கொடூரம் : இருவர் மரணம்

திருவாரூர்

கனின் குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பமே விஷம் அருந்தியதில் தாயும் பாட்டியும் மரணம் அடைந்துள்ளனர்.

மன்னார்குடி அருகில் உள்ள மகாதேவப்பட்டினம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் காசினாதன் (வயது 65).  அந்த கீராமத்தில் வடக்கு தெருவில் வசிக்கும் இவர் தனது மனைவி மாரியம்மாள் (வயது 60), மாமியார் வேதம்மாள் (வயது 80),  மகன் கார்த்தி (வயது 28), மற்றும் மருமகள் கவிதா (வயது 25) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கொத்தனார் வேலை பார்க்கும் கார்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளது.  அவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் அனைவருடனும் தகராறு செய்வது வழக்கம்.   நேற்று கார்த்தி குடித்து விட்டு வந்து மனைவி கவிதாவுடன் தகராறு செய்துள்ளார்.   தடுக்கப் போன குடும்பத்தினர் அனைவரையும் தாறுமாறாக பேசி உள்ளார்.   இதனால்  அனைவரும் மனம் உடைந்தனர்.

காசிநாதன்,  மாரியம்மாள், வேதம்மாள், கவிதா ஆகிய நால்வரும் விஷம் அருந்தி உள்ளனர்.   அக்கம் பக்கத்தவர்கள் இவர்கள் மயங்கி கிடப்பதை கண்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   அங்கு மாரியம்மாள் மற்றும் வேதம்மாள் உயிர் இழந்தனர்.

காசிநாதனும் கவிதாவும் இன்னும் அபாய நிலையில் உள்ளதால் தஞ்சை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.    காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.