சென்னை

ங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த நிலை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் மேலும் இரு தினங்களு்க்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நேற்று டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.  சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். வெப்பசலனம் காரணமாகத் தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது. சென்னை புறநகர் பகுதியான  தாம்பரத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ மழை பெய்தது.

இந்த மழையால் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வேகமாக நிரம்பி வருகின்றது. சென்னை நகரைச் சுற்றியுள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று குமரிக்கடல் முதல் தென்கிழக்கு வங்கக்கடல் வரை நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ”குமரிக் கடல், அதை ஒட்டிய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் டிச.1ம் தேதி மற்றும் 2 ஆம் தேதி (இன்றும் நாளையும்)  கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.

அத்துடன்  திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என அறிவித்துள்ளார்.