பன்றிக்காய்ச்சல் பீதி : புறக்கணிக்கப்பட்ட ஆந்திர கிராமம்

கோடூரு, ஆந்திரப் பிரதேசம்

ந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து பன்றிக் காய்ச்சல் மரணம் நிகழ்ந்ததால் அந்த கிராமத்தை சுற்று வட்டார மக்கள் புறக்கணித்துள்ளனர்.

நாடெங்கும் தற்போது பன்றிக்காய்ச்சல் குறித்த பீதி நிலவி வருகிறது. இது குறித்து அரசு பல விளம்பரங்கள் செய்த போதிலும் அது குறையவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை என்னும் பெயரில் மக்கள் பல நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். முன்னெச்சரிக்கை நல்லது என்னும் போதிலும் அதனால் மற்றவர்கள் பாதிக்கும் நிகழ்வும் சமீபத்தில் நடந்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கோடூரு மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூரின் பெயர் சிந்தகோலா ஆகும். மிகவும் சிறிய ஊரான சித்த கோலாவில் மூன்று தினங்களுக்கு முன்பு நரசையா என்பவர் பன்றிக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு மாரியம்மா என்னும் பெண் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளார். இதனால் அந்த கிராமத்தின் சுற்றுப்புற் ஊர்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

சித்தகோலா கிராமத்தில் இருந்து வெளியூருக்கு சென்று மாணவர்கள் படிக்கின்றனர். அந்த மாணவர்கள் வருவதை தடுக்க அந்த மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த ஊருக்கு செல்லும் தனியார் பள்ளி வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பால்காரர்கள் அந்த கிராமத்துக்கு செல்வதை நிறுத்தி விட்டன்ர். அதனால் சிறு குழந்தைகளும் பாலின்றி தவித்து வருகின்றனர்

சித்தகோலா வில் வசிக்கும் மக்களை பேருந்துகளில் ஏற்றிக் கொள்வது இல்லை. அதையும் மீறி அவர்கள் ஏறினால் மற்ற பயணிகள் அவர்களை இறக்கி விடுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்க அரசு சுகாதார அதிகாரிகள் பன்றிக் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தி வருகின்றனர். அந்த ஊரில் உள்ள அனைவரும் சோதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுப் புற மக்கள் அரசு அதிகாரிகள் கூறும் எதையும் நம்பாமல் உள்ளதால் அதிகாரிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.