மேட்டூர்: ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டு வருவதைப்போல், மேட்டூர் அணையில் தேங்கும் நீரிலிருந்து, ஆண்டு முழுவதும் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை தமிழக மின்சார வாரியம் மேற்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் சமயங்களில் மட்டுமே நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூரில், மின் வாரியத்திற்கு 810 மெகாவாட் திறனில் அனல் மின் நிலையமும், மேட்டூர் அணைக்கு அருகில் பல்வேறு திறன்களில், 10க்கும் அதிகமான நீர் மின் நிலையங்களும் உள்ளன.

வறட்சி காலங்களில் அணை வறண்டு, தண்ணீரின் அளவு வெறும் 5 டிஎம்சி என்றிருக்கும்போது, அதை வேளாண்மைக்கு பயன்படுத்த முடியாமல் அப்படியே வீணாகிறது. எனவே, அவ்வாறு தேங்கும் நீரை, புதிதாக ஒரு நீர்த்தேக்கம் கட்டி, அங்கே எடுத்துச்சென்று, நிரந்தர முறையில் மின்சாரம் தயாரிக்க மின்வாரியத்தின் சார்பில் பரிசீலிக்கப்பட்டது.

ஆனால், அந்தப் பரிசீலனை எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், தற்போது ஒரு யூனிட் நீர் மின் உற்பத்தி செலவு 75 காசுக்கும் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.