சென்னை,

மிழகத்தை ஆள்வர் யார் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி விடுத்துள்ளார். தமிழகத்தை  ஆள்வது அதிமுகவ? அல்லது பாஜகயா? என மு.க.ஸ்டாலின் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

‘மத்திய அரசின் சாதனைகளை தொகுத்து வரும் தமிழக அரசின் செயல்  மன்னிக்க முடியாத துரோகம் என திமுக செயல தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என்பது புரியாத மர்மமாக உள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக ஆட்சி நடத்துகிறது என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் செயல் அதிமுக அரசுக்கு வெற்றிக்கதைகளாக தெரிகிறது.

தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜக முன்பு அதிமுக மண்டியிடுவது துரோகம். மத்திய அரசுக்கு காவடி எடுக்கும் அதிமுக அரசு மக்கள் கோபத்தைச் சந்திக்க நேரிடும்.

மத்திய அரசின் எடுபிடியாக செயல்படும் அதிமுக அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், மக்களை சந்தித்து புதிய தீர்ப்பை அதிமுக பெற வேண்டும் என்றும்,  தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு அதிமுக அரசு சாமரம் வீசுகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அதிமுக அரசு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.