மதுரையை இரண்டாம் தலைநகராக்க ஒன்பது வருடமாக அதிமுக ஏன் ஒன்றும் செய்யவில்லை?  : திமுக கேள்வி

துரை

திமுக மதுரை மேற்கு மாவட்டக் குழு நேற்று மதுரை நகரை இரண்டாம்  தலைநகராக்கத் தீர்மானம் இயற்றியதை திமுக விமர்சித்துள்ளது.

நேற்று அதிமுக மதுரை மேற்கு மாவட்ட குழு மதுரை நகரை இரண்டாம் தலைநகராக அமைக்கத் தீர்மானம் ஒன்றை இயற்றியது.  இதைத் தமிழக வருவாய்த்துறை, மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் நிறைவேற்றி உள்ளார்.  இந்த தீர்மானத்தில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மற்றும் காந்தி நகர் என இரு தலைநகர் உள்ளதையும் ஆந்திராவில் 3 தலைநகர் உள்ளதையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி டி ஆர் என அழைக்கப்படும் பி தியாகராஜன் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர், “இம்மாநிலத்தில் உள்ள அரசால் நிதி மேலாண்மையை சரியாகச் செய்ய முடியவில்லை.  மேலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியவில்லை.  வேலைவாய்ப்பை உருவாக்கவோ கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தவோ இவர்களால் முடியவில்லை.

ஆனால் அவர்களால் இந்த தறுவாயில் விதம் விதமான அறிக்கையை அளிக்க முடிகிறது.  மக்களை அவர்கள் முட்டாள்கள் என நினைத்துள்ளனரா?  மதுரைக்கு தற்போதைய தேவை அதிக முதலீடு, அதிக முக்கியத்துவம், அதிக வளர்ச்சி அதிக உள்கட்டமைப்பு, நல்ல  முன்னேற்றம் என்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். நாம் அதையே தொடர்ந்து கூறி வருகிறோம்.

மதுரை நகரைத் தலைநகர் என அழைத்தாலும் சரி அல்லது உலகின் மிகச் சிறந்த நகராகக் குறிப்பிட்டாலும் சரி உண்மையில் நகர் எவ்வாறு உள்ளது என்பதே முக்கியமாகும்.   அதாவது மக்களின் முன்னேற்றம் தான் தற்போதைய தேவை ஆகும். கடந்த 10 வருடமாக இவர்கள் (அதிமுகவினர்) எதுவும் செய்யவில்லை.  மதுரை நகர உள்கட்டமைப்பு சீர் கெட்டு வருகிறது.

குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டம் குறித்துக் கூட  யாரும் கடந்த 10 வருடங்களாகக் கவலைப்படவில்லை,  என்னைப் பொறுத்தவரை முன்னேற்ற நடவடிக்கைகள் எதுவும் செய்யாமல் மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிப்பதால் மட்டும் ஒரு பயனும் இல்லை எனவே தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு இந்த கோரிக்கையை அவசியம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஏற்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.

 செல்லூர் ராஜு, “எம் ஜி ஆர் மதுரை மாநகரை இரண்டாம் தலைநகராக்க விரும்பினார். அதற்காகவே அவர் உலக தமிழ் மாநாட்டை மதுரை நகரில் நடத்தினார்.  ஜெயலலிதா தனது அரசியல் தொடர்பான முடிவுகளை மதுரை மாநகரில் அடிக்கடி எடுத்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1981 ஆம் வருடம் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதால் எம் ஜி ஆர்  திருச்சியைத் தலைநகராக மாற்ற விரும்பினார்.  ஆனால் எம் ஜி ஆருக்கு தலைநகரை மாற்ற விருப்பம் இல்லை எனவும்  பிரச்சினைகளைத் திசை திருப்ப இவ்வாறு கூறுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி அப்போது தெரிவித்தது  குறிப்பிடத்தக்கதாகும்.