சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார்.

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர் பேரணியை தொடக்கி வைத்தார். பாத்னி கலான் பகுதி முதல் ஜாத்பூர் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.
பின்னர் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது: வேளாண் மசோதாக்களால் பிரச்னை இல்லை என்றால், விவசாயிகள் எதற்காக போராட்டம் நடத்துகின்றனர்?
கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் வேளாண் மசோதாக்கள் அவசர அவசரமாக சட்டமாக நிறைவேற்றப்பட்டது ஏன்? விவசாயிகள் நலனுக்கான மசோதாக்கள் என்றால் அது நாடாளுமன்ற அவையில் ஏன் விரிவான விவாதம் நடத்தப்படவில்லை?
ஹத்ராஸ் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பேசினார்.