இத்தாலி :

லக அரங்கில் கால்பந்து போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது ஐரோப்பிய கால்பந்து அணிகள் தான்.

இதில், தலைசிறந்த அணிகள் என்றாலே, சின்ன குழந்தை முதல் பெரியவர் வரை சொல்வது, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து இப்படி வரிசையாக ஐரோப்பிய அணிகளின் பெயர்களைத்தான்.

சாம்பியன் லீக் என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் கால்பந்தாட்ட போட்டி நடைபெறுவது வழக்கம்.

படம் : டெய்லி மெயில்

ஐரோப்பிய யூனியன் என்பது ஒரே பிரதேசம் என்பதால் அங்குள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள், கால்பந்தாட்ட போட்டிகளை காண எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள், அதுமட்டுமன்றி, தங்கள் அணி வெற்றி பெறவில்லையென்றால், வீதியில் இறங்கி கலவரம் நிகழ்த்திய வரலாறுகளும் உண்டு.

இதுபோல் தற்போது, இத்தாலியின் மிலானோ நகரில் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வாலென்சியா மற்றும் இத்தாலியின் அட்லாண்டா அணிகளுக்கு இடையில் நடந்த போட்டி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப். 19-ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியை காண 44,000 ரசிகர்கள் கூடியது தான், இத்தாலியில் கொரோனா வைரஸ் இந்தளவிற்கு பாதிக்கவும் மரணிக்கவும் காரணம் என்று  செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி நடந்த மூன்று நாட்கள் கழித்து இத்தாலியின் முதல் கொரோனா வைரஸ் உயிரிழப்பு நடந்தது குறிப்பிட தக்கது.

மேலும், இதுகுறித்து பெர்கமோ நகர மேயர் கூறுகையில் இந்த போட்டி தான் “பயோ குண்டாக” இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை நிர்மூலமாக்க காரணம் என்று கூறியிருக்கிறார்.