சென்னை:

டிடிவி தினகரனின் அமமுக பதிவு செய்வதற்கு தடை கேட்டு, பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், அமமுக பதிவு செய்யப்படுவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று நீதிமன்றம், புகழேந்தியிடம் கேள்வி எழுப்பிய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி  தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமமுக நிர்வாகியும், டிடிவியின் முன்னாள் நண்பருமான பெங்களூர் புகழேந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழங்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தத. அப்போது புகழேந்தியை கண்டித்த நீதிபதி, அரசியல் பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தை நாடக் கூடாது என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, அமமுகவில் உறுப்பினராக இல்லாத நிலையில் அக்கட்சியைப் பதிவு செய்வது குறித்து உங்களுக்கு என்ன கவலை, நீங்கள் எப்படி இந்த வழக்கைத் தாக்கல் செய்ய முடியும் என்று புகழேந்தி தரப்புக்குக் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக தினகரனும், ‘புகழேந்தி அளித்த பிரமாணப் பத்திரத்தை மட்டும் விலக்கி வைத்து விட்டு மற்ற ஆவணங்கள் முறையாக இருந்தால் பரிசீலனை செய்யலாமா’ என்பது குறித்து தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 9ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.