மத்திய அரசு வேலையில் உள்ள மற்ற மொழி நபர்களை ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள்! ப.சிதம்பரம்

சென்னை: இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, பயன்படுத்த மத்தியஅரசு அதிகாரிகளுக்கு  அறிவுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வேலைக்கு மற்ற மொழி நபர்களையும், ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் டெல்லிக்கு செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, “நீங்கள் இந்தியனா?” என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு, சர்ச்சையாகியிருக்கிறது.

இதுகுறித்து முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், தானும் இதுபோன்ற அவதூறுகளை  அனுபவித்திருக்கிறேன்,  தொலைபேசி உரையாடல்களின் போதும்,   சில சமயங்களில் நேருக்கு நேர் பேசும்போதும் நான் இந்தியில் பேச வேண்டும் என்றுஎ வலியுறுத்தி உள்ளனர்.

இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருப்பதற்கு மத்திய அரசு உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருமொழிகள் என்பதை வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசு பதவிகளில் ‘இந்தி தெரியாத மத்திய அரசு ஊழியர்கள் விரைவாக இந்தி கற்றுக்கொள் ளும்போது, மத்திய அரசு பதவிகளில் இந்தி பேசும் நபர்கள் ஏன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாது?

மத்திய அரசு வேலைக்கு செல்லும் மற்ற மொழி நபர்களை விரைவாக இந்தியை கற்க சொல்வது போல், ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே இந்தியாவின் அலுவலக மொழிகளாக இருப்பதற்கு மத்திய அரசு உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழியின் விரும்பத்தகாத அனுபவம் அசாதாரணமானது அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

You may have missed