நெட்டிசன்:

வாழப்பாடி இராம. சுகந்தன் முகநூல் பதிவு

Maharashtra: Pune based Mylab Discovery Solutions Pvt Ltd has developed India’s first indigenous COVID19 testing kit that has been approved by the Indian Council of Medical Research (ICMR). A single kit costs Rs 80,000 & can test 100 patients)

ரூ. 800 ஒரு நபருக்கு பரிசோதனை செய்ய ஆகும் செலவு என்ற இடத்தில் 4,500 ரூபாய் எதற்கு? மக்கள் கஷ்டப்படும் போது அவர்களிடம் பணத்தை பிடுங்க வேண்டுமா ? என்னைப் பொறுத்த வரையில் ₹ 1200 ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலிக்க கூடாது !

எனக்குத் தெரிந்த நண்பர்கள் கொரியாவில் இருந்து இந்த வைரஸ் பரிசோதனைக்காக உபகரணங்களை தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் ஆனால் இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஒன்றும் செய்ய இயலாது என்று அவர்களிடம் கூறிவிட்டேன். அவர்கள் கொடுத்த கணக்கின் படி ஒரு பரிசோதனைக்கு ரூபாய் 800 இருந்து 900 ரூபாய் வரை தான் வருகின்றது ! இரு அரசாங்கங்கள் நேரடியாக ஒப்பந்தம் செய்து வாங்கினால் இன்னும் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது!

இன்னும் சில நாட்களில் மக்கள்
தும்மினாலோ / இருமினாலோ உடனே பரிசோதனை கூடத்திற்கு சென்று இந்த வைரஸ் இல்லை என்று பரிசோதித்த பின்னர்தான் அவர்களுக்கு நிம்மதி வரும்.

இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மக்களிடம் பணம் இல்லாத நேரத்தில் மக்களிடம் கொள்ளையடிக்க வேண்டாம் !