மதுரை: ஒப்புதல் கிடைத்தப் பிறகும், மதுரை – உசிலம்பட்டி இடையிலான இரண்டாவது அகல ரயில் பாதையில், ரயில்களை இயக்குவது தொடர்ந்து தள்ளிப்போகிறது என்று புகார் எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

மதுரை – போடி இடையே, ஏற்கனவே இருந்த 96 கி.மீ. மீட்டர்கேஜ் ரயில்பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்படுகிறது.

முதற்கட்டமாக, மதுரை-உசிலம்பட்டி இடையே அகலப்பாதை பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் இரண்டாவது அகல ரயில்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதமே, இந்த இரண்டாவது ரயில் பாதையில், அதிகவேக ரயில் மூலம் ஆய்வுசெய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன், இப்பாதையில் பயணிகள் ரயிலை இயக்க அனுமதியளித்தார்.

ஆனாலும், ரயில்வே அதிகாரிகளின் ஆர்வமின்மை மற்றும் அக்கறையின்மை காரணமாக, ஆய்வு முடிந்து அனுமதியளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாகியும் இன்னும் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை என்ற குமுறல் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

எனவே, அப்பாதையில் ரயில்களை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?