பிரதமர் மோடியை கட்டிபிடித்தது ஏன்?….ராகுல்காந்தி விளக்கம்

டில்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டில்லியில் உள்ள சுமார் 100 பெண் பத்திரிக்கையாளர்களுடன் இன்று கலந்துரையாடினார். இது குறித்து ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விபரம்…

ராகுல்காந்தியிடம் மாற்றம்

சில வருடங்களுக்கு முன்பு இருந்த ராகுல்காந்திக்கும், தற்போதுள்ள ராகுல்காந்திக்கும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அவரிடம் தற்போது அதிக தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தயக்கமின்றி கேள்விகளுக்கு பதிலளித்தார். பெண்கள் இட ஒதுக்கீடு முதல் கூட்டணி அரசியல் குறித்த கேள்விகள் வரை அவர் சரளமாக பதிலளித்தார்.
அதோடு கேள்விகள் தொடர்பான பத்திரிக்கையாளர்களின் பதில்களையும் அவர் கேட்டறிந்தார். இதன் மூலம் அவர் மற்ற தலைவர்களை போல், பேசுவது மட்டுமின்றி மற்றவர்கள் பேசுவதை கவனிக்கும் தன்மையுடன் உள்ளார்.

பாஜக.விடம் பாடம் படித்த ராகுல்

ராகுல்காந்தியின் மவுனமான செயல்பாடு தனக்கு எவ்விதமான பரிசுகளையும் பெற்று தரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது இப்போது நடந்துவிட்டது. மதசார்பின்மை மற்றும் இந்தியாவின் ஒற்றுமைக்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கை பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இன்றைய ராகுல்காந்தியின் செயல்பாட்டை பார்க்கும் போது அவருக்கு அரசியல் ஒரு இடம் உண்டு என்பது அப்பட்டமாக தெரிய தொடங்கியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் பாஜக.விடம் இருந்து அதிகம் கற்றுக் கொண்டுள்ளார். நாட்டையும், அவரது கட்சியின் சிறப்பையும் புரிந்துகொண்டுள்ள ராகுல்காந்தி, தான் சரியான இடத்தில் தான் நிற்கிறோம் என்பதை உணர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் மகளிருக்கு பிரதிநிதித்துவம் ஆகியவை அளிக்கப்படவுள்ளது. இந்த விஷயத்தில் பாஜக.விடம் கோபமும், அதிகளவு ஈகோவும் உள்ளது. ஆனால், காங்கிரஸ் பெண்ணியத்தை நோக்கி முயற்சி செய்து வருகிறது என்று ராகுல் தெரிவித்தார்.

மோடியை கட்டிபிடித்தது ஏன்?

நாடாளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது பிரதமர் மோடியை ராகுல்காந்தி கட்டிபிடித்தது, மோடி உள்ளிட்ட பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ராகுல் கூறுகையில்,‘‘மோடி எனது குடும்பத்தை ஏன் வெறுக்கிறார்? என்பது எனக்கு புரியவில்லை. மோடியை கட்டிபிடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் திட்டம்.

பேசும் போது கட்டிப்பிடித்தால் அது சரியாக இருக்காது. அதனால் தான் நான் எனது பேச்சை முடித்தவுடன் கட்டிப்பிடித்தேன். அது தான் அவரை சந்தித்து கட்டிபிடிக்க சரியான நேரம் என்பதை உணர்ந்தேன். நான் செய்தது சரியான விஷயம் தான் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

You may have missed