நெட்டிசன்:

Sanjai Gandhi என்பவரின் முகநூல் பதிவு

ணி சங்கர் அய்யர் தன்னை இழிபிறவி என்று சொல்லிவ்விட்டார், அதன் மூலம் குஜராத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதித்து விட்டார் என்றும், அதே மணி சங்கர் அய்யர் தன்னை அழிக்க பாகிஸ்தானில் ஆள் செட் பண்ணார் என்றும், அதே மணி ஷங்கர் அய்யரும் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங்கும் பாகிஸ்தான் தூதரை சந்தித்து குஜராத் தேர்தல் தொடர்பாக திட்டம் போட்டதாகவும், அகமது படேலை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புவதாகவும் நரேந்திர மோடி ஒப்பாரி வைத்த போதே காங்கிரசின் வெற்றி உறுதியாகிவிட்டது.

1. பிரதமரை அழிக்க ஆள் செட் பண்ண மணி ஷங்கர் அய்யர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?

2. இந்தியாவின் அரசியலில் தலையிடும் பாகிஸ்தான் தூதரை ஏன் வெளியேறவில்லை?

3. குஜராத்தில் இந்தியப் பிரதமரை விட பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானு தூதருக்கும் செல்வாக்கு அதிகம் என்று சொல்கிறாரா  இந்தியாவின் அவமான சின்னமாக விளங்கும் மோடி?

மோடியின் பேரணிக்கு ஆட்கள் வராததாலும் ராகுலின் பேரணிக்கு பெரும் கூட்டம் வருதாலும், அதை சகித்துக் கொள்ளாத மோடியின் பினாமி தேர்தல் ஆணையம், காவல் துறையின் மூலம் பேரணிகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதித்திருக்கிறது.

காங்கிரஸ் பிரமாண்ட வெற்றி பெரும் என்பதற்கான அடையாளம் தான் இது. கொண்டாடுவோம்.