ஜெயலலிதாவை வீடியோ எடுத்தது ஏன்?…தினகரன் பதில்

சென்னை:

ஜெயலலிதா கேட்டு கொண்டதன் பேரில் தான் வீடியோ எடுக்கப்பட்டது டிடிவி தினகரன் கூறினார்.

இது குறித்து அவர் மேலும், கூறுகையில், ‘‘வேட்பாளராக இருப்பதனால் என்னால் வீடியோ வெளியான நேரத்தில் பதில் கூற முடியவில்லை. ஜெயலலிதா கேட்டு கொண்டதன் பேரில் 2016-ம் ஆண்டு நவம்பரில் சசிகலா இந்த வீடியோவை எடுத்தார். ஜெ.சிகிச்சை வீடியோ எங்களிடம் பிப்ரவரி முதல் இருக்கிறது.

வீடியோ இருப்பது அமைச்சர்கள் பலருக்கும் தெரியும். ஏதோ ஒரு காலத்தில் அந்த வீடியோ தேவைப்படும் என்பாதல் கேட்டுப் பெற்றேன். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா மீது திமுகவினர் களங்கம் ஏற்படுத்த முயன்றனர். அந்த வீடியோவை நான் தான் வெற்றிவேலிடம் கொடுத்தேன். எனது கவனத்திற்கு வராமலேயே வீடியோ வெளியிடப்பட்டது. வீடியோ வெளியிட்டது கீழ் தரமான அரசியல் என ஸ்டாலின் கூறியது தவறானது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அந்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது வருத்தம் தான். எம்.எல்.ஏ.பதவி போனாலும் சுயநலத்திற்காக வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டிருக்க மாட்டார். வெற்றி வேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது உறவினர்கள் கூறியதை ஏற்க முடியாது’’ என்றார்.