மகாத்மா காந்திக்கு பாஜக ஏன் பெரிய சிலை அமைக்கவில்லை : சசி தரூர் கேள்வி

திருவனந்தபுரம்

டேலுக்கு 182 மீட்டர் உயர சிலை வைத்த பாஜக அவருடைய குருவான மகாத்மா காந்திக்கு ஏன் பெரிய சிலை அமைக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சாது பெட் என்னும் தீவில் இன்று சர்தார் வல்லப் பாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உலகின் மிக உயரமான சிலையான படேல் சிலை 182 மீட்டர் உயரமானதாகும். இன்று திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

சசி தரூர் தனது உரையில், “ நாட்டில் எந்த இடத்திலும் மகாத்மா காந்திக்கு மிக உயரமான சிலை கிடையாது. பார்லிமெண்டில் உள்ள சிலையும் படேலுடைய சிலை அளவுக்கு 182 மீட்டர் உயரமானது இல்லை. ஆனால் அவருடைய சீடரனான படேலுக்கு பாஜக 182 மீட்டர் உயர சிலை அமைத்துள்ளது. மிகவும் எளிமையான படேல் காந்தியின் முக்கிய சீடர்களில் ஒருவர் ஆவார்.

மிகவும் எளிமையான உண்மையான காந்திய வாதியான படேலுக்கு இது போல பிரம்மாண்டமான சிலை அமைப்பது சரியா என நான் கேட்கிறேன். அத்துடன் பாஜக படேலுக்கு அமைத்தது போல் பிரமாண்டமான சிலையை மகாத்மா காந்திக்கு ஏன் அமைக்கவில்லை?

படேல் போன்ற தேசப்பற்றுள்ள தலைவர்களின் புகழை கவர்ந்து செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை பாஜக மறந்து விடக்கூடாது. காந்தியுடன் இணைந்து பணியாற்றிய படேல் காங்கிரசை பலப்படுத்திய தலைவர்களில் ஒருவர். அதை எந்நாளும் காங்கிரஸ் மறக்காது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.